
கூத்தாண்டவர் திருவிழா என்பது உலக அளவில் மிக பிரசித்தி பெற்ற ஒரு திருவிழாவாக கருதப்படுகிறது. இந்த திருவிழா திரௌபதி அம்மன் ஆலயம் உள்ள ஊர்களில் இந்த கூத்தாண்டவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பொதுவாக திரௌபதி அம்மன் கோவிலில் கூத்தாண்டவரின் தலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். ஒரு சில ஊர்களில் இவருக்கென தனி கோவிலை கட்டி இருப்பார்கள். இந்த இடங்களில் இவருக்காக சித்திரை மாதத்தில் திருவிழா எடுத்து கொண்டாடுவார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால் இங்கு பிரார்த்தனைக்காக தாலி கட்டிக் கொள்ளும் சடங்கு என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்காக திருநங்கைகள் இந்தியா முழுவதிலும் இருந்தும் ஒன்று கூடுவார்கள்.
இந்த கூத்தாண்டவர் என்பவர் அரவான் என்றும் அழைக்கப்படுவார். அரவான் என்பவர் யார் என்றால் மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கும் நாககன்னிக்கும் பிறந்தவர். மகாபாரத யுத்தத்தின் போது போர் உடைய வெற்றிக்காக நரபலி கொடுக்கும் வழக்கம் அந்நாளில் இருந்து. அதனால் மகாபாரத போரில் பாண்டவர்களுடைய வெற்றிக்காக நரபலி கொடுக்க வேண்டும். பலியாகும் நபர் 32 லட்சணங்கள் பொருந்துவராக இருக்க வேண்டும். அப்படி பார்த்தேமேயானால் அர்ஜுனன் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் மகன் அரவான் ஆகியோர் மட்டுமே இதற்கு தகுதியானவர்களாக இருந்தார்கள்.

அப்படி இருக்கையில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் இந்த போரில் முக்கியமானவர்களாக இருந்ததால் பலி கொடுக்க அரவானிடம் கேட்டார்கள். அதற்கு ஒத்துக்கொண்ட அவர் கிருஷ்ணனிடம் பலிக்கு முன் தான் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஈடுபட ஆசைப்படுவதாக கூறினார். அதற்கு கிருஷ்ணர், இறக்கப் போகும் ஒருவருக்கு பெண் கொடுக்க யாரும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் தானே மோகினி அவதாரம் எடுத்து அவரை திருமணம் செய்து கொண்டார். மறுநாள் அரவான் பலியான பிறகு தாலியறுத்து சடங்கை நிறைவேற்றினார். இந்த வரலாற்றை ஞாபகப்படுத்துவதற்காகவே கூத்தாண்டவர் திருவிழாவில் அரவாணிகள் கிருஷ்ண அவதாரமாக எண்ணி அரவனுக்கு தாலி கட்டும் சடங்கில் ஈடுபடுகிறார்கள்.

இந்த உலக அளவில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் திருவிழா விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெறும். அன்று திருநங்கைகள் உடைய அழகி போட்டியும் நடத்துவார்கள். கூவாகம் மட்டுமின்றி புதுச்சேரி பிள்ளையார்குப்பம், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் கிராமத்திலும், தைலாபுரம் அடுத்து கிளியனூரிலும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.