பயணங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்களை கொடுக்க வல்லது. இயற்கையால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பானாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பானாலும் அதை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சிந்தனைகளைக் கொடுக்கும். அந்த வகையில் நான் சென்ற ஒரு பிரபலமான சுற்றுலா தளத்தில் கண்ட இயற்கை தந்த கலைப்பொக்கிஷங்கள் தான் இந்த புகைப்படங்கள் .
1. ஆந்தை பாறை

எனக்கு இதை பார்க்கும் பொழுது ஒரு ஆந்தை அமர்ந்திருப்பது போல் தோன்றியது. சிறிது நேரம் கழித்து மறுபடி அதை உற்று பார்க்கும்போது ஒரு ஏலியன் தன் முழங்காலை தன் கைகளால் கட்டிக் கொண்டு அமர்ந்திருப்பது போல் தோன்றியது.
2. முரசு பறை

இந்த புகைப்படத்தை பாருங்கள். இதைப் பார்ப்பதற்கு ஒரு முரசு போல் தோன்றுகிறது அல்லவா? இது முன்பு ஒரு காலத்தில் ஒரு உருளை வடிவத்தில் இருந்திருக்க வேண்டும். அதை இங்கு கட்டப்பட்டிருக்கும் பெரும் மதில் சுவற்றிற்கோ அல்லது கட்டிடங்களை கட்டுவதற்காகவோ கற்களுக்காக அவற்றை உடைத்து இருக்க வேண்டும். எது எப்படியோ இது பார்ப்பதற்கு ஒரு முரசு போல் தோன்றுகிறது அல்லவா?
3. தலைகீழாக நிற்கும் “கமா’

இந்த புகைப்படத்தை பாருங்கள்! ஒரு “கமா’ வை தலைகீழாக நிற்க வைத்து போன்று இருக்கிறதல்லவா?
இந்த புகைப்படத்தில் உள்ள பாறைகள் எங்கே உள்ளது என்று பார்ப்போம்.
- ஏலியன்ஸ் பாறை – செஞ்சி கோட்டை
- முரசு பறை – செஞ்சிக்கோட்டை
- தலைகீழான கமா – மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்