
புதுச்சேரி அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் (Puducherry Science Centre & Planetarium) புதுச்சேரி அறிவியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு பொது அறிவியல் கோளரங்கம் ஆகும். இது இந்தியாவின் ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் லாசுபேட்டையில் அமைந்துள்ளது.

அறிவியல் விளக்கப் பகுதியில், பார்வையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு நேரடி சோதனைகள் மூலம் அறிவியல் காட்சிகள் விளக்கப்படுகின்றன குழந்தைகள் பகுதியில் குழந்தைகளுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கண்காட்சிகளைப் பராமரிப்பதற்கும் புதியவற்றை மேம்படுத்துவதற்கும் கருவிகள் மற்றும் தடுப்புகளுடன் கூடிய பட்டறை ஒன்றும் உள்ளது. அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் 3 ஏக்கர் நிலப்பரப்பில் 1500 சதுர மீட்டர் கட்டப்பட்ட பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த அறிவியல் மையத்தில் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் பாடத்தில் உள்ள செயல்திட்டங்கள் நேரடியாக செயல்படுத்தி பார்ப்பதால் மாணவர்களுக்கு சுலபமான புரிதலையும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனையும் அதிகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

கடல் வாழ் உயிரினக் காட்சியகம் 300 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. , கடல் பன்முகத்தன்மை, கடல் வளங்கள், கடல் வளங்களுக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் கடல் சுற்றுலா என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


அறிவியல் வேடிக்கைப் பிரிவு சுமார் 300 சதுர மீட்டர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மிகவும் பொழுதுபோக்கு சூழ்நிலையில் அறிவியலின் பல்வேறு அம்சங்களைத் தெரிந்துகொள்ளவும், ஆராயவும் மற்றும் அனுபவிக்கவும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன.

இந்த மையத்தின் முதல் மாடியில் கோளரங்கம் ஒன்று உள்ளது இதில் வானவியல் பற்றிய காட்சிகள் 3D தொழில்நுட்பத்தில் காட்டப்படுகிறது. சிறுவர்களுக்கு இதை பார்க்கும் போது வானத்தில் கோள்களுடன் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.google map link: https://maps.app.goo.gl/C9A9ZyvkLd2wPZqf6
மேலும் வீடியோ காட்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் 👇https://youtu.be/9eHcJLm5Lck