
ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம் புதுச்சேரி மாநிலம் வில்லியனுர் அருகில் திருக்காஞ்சி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 3000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் அகத்தியர் கையால் பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது.

இந்த ஆலயத்தை ஒட்டி சங்கராபரணி என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆறு செஞ்சி மலைகளிலிருந்து உருவாகுவதால் செஞ்சி ஆறு என்றும் வராக நதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றின் மறுகரையில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது

இந்த ஸ்தலம் ராகு மற்றும் கேது பகவான் வழிபட்ட தலமாகும். இந்த தலத்தில் இறைவன் மேற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார். ராகு மற்றும் கேது தோஷம் நீங்க இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

இந்த ஸ்தலம் காசிக்கு நிகராகவும், மற்றும் இங்கு உள்ள சங்கராபரணி ஆறு காசியில் உள்ள கங்கை ஆற்றுக்கு சமமானதாகவும் கருதப்படுகிறது. ஆகையால் இந்த சங்கராபரணி ஆற்றில் நீராடினால் காசியிலுள்ள கங்கையில் நீராடிய புண்ணிய பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இங்கு வருடா வருடம் மாசி மகம் அன்று தீர்த்தவாரி நடைபெறும். அன்றைய தினத்தன்று இந்த கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களின் கோவில்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகள் இங்கே வந்து தீர்த்தவாரி நடைபெறும்.

மேலும் இந்த ஸ்தலம் காசிக்கு நிகராக போற்றப்படுவதால் இங்கே பித்ரு தோஷம் நீங்க இந்த ஆற்றில் நீராடிவிட்டு திதி கொடுத்து தர்ப்பணம் செய்வார்கள். அதற்காக இங்கே புதுச்சேரி அரசு தற்பணம் மண்டபங்களும் படித்துறையும் அமைத்துள்ளது. மேலும் வளாகத்தை சுற்றி அழகுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது.

2 responses to “பித்ருதோஷம் நீக்குவதில் காசிக்கு நிகரான ஸ்தலம் எங்கு உள்ளது தெரியுமா?”
Thanks for your blog, nice to read. Do not stop.
Thank you