
இத்திருக்கோவில் கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி ஆயிரக்கணக்கான மண் மற்றும் சிமெண்ட் சிலைகள் அதிகமாகக் காணப்படுகிறது. இவை அனைத்தும் பல வண்ணங்களில் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், டாக்டர், காவல்துறை அதிகாரிகள், வீடுகள், வாகனங்கள் போன்ற வித்தியாச வித்தியாசமான சிலைகளை பார்க்க முடிகிறது.

நீங்கள் நிறைய கோயில்களுக்கு போயிருப்பீங்க! அங்கெல்லாம் சிறு சிறு கற்களை அடுக்கி வீடுகள் கட்டுவது, அங்கு இருக்கும் தல விருட்சங்களில் கோரிக்கை சீட்டு எழுதி கட்டுவது, ஊஞ்சல் கட்டுவது ஆகியவற்றை பார்த்திருக்கலாம். அது போல் இங்கும் வேண்டுதலுக்காக வைக்கப்பட்ட சிலைகள் தான் இவைகள். இந்தக் கோவிலில் வேண்டிகிட்ட சிலநாட்களிலேயே அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு சாட்சியாக தான் இந்த ஆயிரக்கணக்கான சிலைகள் நிற்கிறது.

இதுமட்டுமல்லாமல் இங்கு அழகர் சித்தர் என்ற சித்தர் உடைய ஜீவ சமாதி கோவிலும் உள்ளது. இந்த சித்தர் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வாழ்ந்ததாகவும், அவர் இங்கு உள்ள அய்யனார் கோயிலின் அருகில் உள்ள கிணற்றில் ஜல சமாதி அடைந்து விட்டதாகவும், கூறப்படுகிறது. அதனால் இப்பொழுதும் அந்த கிணற்றுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பூஜிக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆடித் திங்கள் அன்றும், வார வாரம் திங்கட்கிழமை அன்றும் மக்கள் அதிகமாக கூடி வணங்குகின்றனர்.


இப்படிப்பட்ட அற்புதங்கள் நிறைந்த இத்திருக்கோயிலுக்கு கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும், புதுச்சேரியில் இருந்து வருபவர்கள் வில்லியனூர் ஏம்பலம் வழியாகவும் தென்னம்பாக்கம் வரலாம். இந்த வேண்டுதலுக்காக செய்யப்படும் சிலைகளுக்காக நாம் எங்கும் சென்று அலைய வேண்டாம் ஏனென்றால் நமக்குத் தேவையான சிலைகள் அனைத்தும் இங்கேயே செய்யப்படுகின்றன.
காணொளியாக பார்க்க இங்கே கிளிக் செய்யவும் https://youtu.be/5S_8ti7I-HY