Tourism & Travel Guide
கூத்தாண்டவர் திருவிழா என்பது உலக அளவில் மிக பிரசித்தி பெற்ற ஒரு திருவிழாவாக கருதப்படுகிறது. இந்த திருவிழா திரௌபதி அம்மன் ஆலயம் உள்ள ஊர்களில் இந்த கூத்தாண்டவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பொதுவாக திரௌபதி அம்மன் கோவிலில் கூத்தாண்டவரின் தலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். ஒரு சில ஊர்களில் இவருக்கென தனி கோவிலை கட்டி இருப்பார்கள். இந்த இடங்களில் இவருக்காக சித்திரை மாதத்தில் திருவிழா எடுத்து கொண்டாடுவார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் இங்கு பிரார்த்தனைக்காக தாலி கட்டிக் கொள்ளும்…
புதுச்சேரி அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் (Puducherry Science Centre & Planetarium) புதுச்சேரி அறிவியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு பொது அறிவியல் கோளரங்கம் ஆகும். இது இந்தியாவின் ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் லாசுபேட்டையில் அமைந்துள்ளது. அறிவியல் விளக்கப் பகுதியில், பார்வையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு நேரடி சோதனைகள் மூலம் அறிவியல் காட்சிகள் விளக்கப்படுகின்றன குழந்தைகள் பகுதியில் குழந்தைகளுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கண்காட்சிகளைப் பராமரிப்பதற்கும் புதியவற்றை மேம்படுத்துவதற்கும் கருவிகள் மற்றும் தடுப்புகளுடன் கூடிய…
மலை பயணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அப்படி கால்நடையாக மலையேற விரும்பும் எல்லோரும் பர்வத மலை, சதுரகிரி மலை, வெள்ளியங்கிரி மலை என்று மிக உயர்ந்த மலைகளையே தேர்வு செய்வார்கள். அப்படி மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் ஒரு முறை இந்த வெண்குன்றம் மலைக்கும் சென்று வாருங்கள். இது சின்ன மலையாக இருந்தாலும் மிகுந்த சுவாரசியமான மற்றும் சவாலான மலையேற்றமாகவும் இருக்கும். வெண்குன்றம் மலை என்பது வந்தவாசி அருகே உள்ள ஒரு சிறிய …
இத்திருக்கோவில் கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி ஆயிரக்கணக்கான மண் மற்றும் சிமெண்ட் சிலைகள் அதிகமாகக் காணப்படுகிறது. இவை அனைத்தும் பல வண்ணங்களில் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், டாக்டர், காவல்துறை அதிகாரிகள், வீடுகள், வாகனங்கள் போன்ற வித்தியாச வித்தியாசமான சிலைகளை பார்க்க முடிகிறது. நீங்கள் நிறைய கோயில்களுக்கு போயிருப்பீங்க! அங்கெல்லாம் சிறு சிறு கற்களை அடுக்கி வீடுகள் கட்டுவது, அங்கு இருக்கும் தல விருட்சங்களில் கோரிக்கை சீட்டு எழுதி கட்டுவது,…
பயணங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்களை கொடுக்க வல்லது. இயற்கையால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பானாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பானாலும் அதை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சிந்தனைகளைக் கொடுக்கும். அந்த வகையில் நான் சென்ற ஒரு பிரபலமான சுற்றுலா தளத்தில் கண்ட இயற்கை தந்த கலைப்பொக்கிஷங்கள் தான் இந்த புகைப்படங்கள் . 1. ஆந்தை பாறை எனக்கு இதை பார்க்கும் பொழுது ஒரு ஆந்தை அமர்ந்திருப்பது போல் தோன்றியது. சிறிது நேரம் கழித்து மறுபடி அதை உற்று பார்க்கும்போது ஒரு…
ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம் புதுச்சேரி மாநிலம் வில்லியனுர் அருகில் திருக்காஞ்சி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 3000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் அகத்தியர் கையால் பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது. இந்த ஆலயத்தை ஒட்டி சங்கராபரணி என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆறு செஞ்சி மலைகளிலிருந்து உருவாகுவதால் செஞ்சி ஆறு என்றும் வராக நதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றின் மறுகரையில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஸ்தலம் ராகு…